தலைப்புச் செய்திகள்

நட்டத்தில் இயங்கும் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பனவு: அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பனவு வழங்கிய இரண்டு நிறுவனங்களின் தலைவர்களிடமிருந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இரண்டு நிறுவனங்களும் நட்டத்தில் இயங்கும் நிலையில், அவை – தமது ஊழியர்களுக்கு கடந்த வருட இறுதியில் போனஸ் கொடுப்பனவுகளை வழங்கியுள்ளன.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியவையே இவ்வாறு தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பனவுகளை வழங்கியுள்ளன.

இது இவ்வாறிருக்க, தொடர்ச்சியாக தனது ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பனவுகளை வழங்கி வந்த இலங்கை மின்சார சபை, கடந்த வருட இறுதியில் போனஸ் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.