அரை நூற்றாண்டுக்கு மேல் பணிபுரிந்த நடராஜ ஐயருக்கு, ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தினர் பாராட்டு

🕔 January 13, 2016

SLRC - 01
– அஷ்ரப் ஏ. சமத் –

தொலைக்காட்சி மற்றும் ஒலிபரப்பு துறையில் 57 வருடம் பணியாற்றிய, செய்தி ஆசிரியர் எஸ். நடராஜ ஐயாின் சேவையை பாராட்டும் நிகழ்வொன்று, இன்று புதன்கிழமை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது.

இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபன தமிழ் செய்திப்  பிரிவினர் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது, இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவின் செய்திப் பணிப்பாளா் யூ.எல். யாக்கூப்,  நடராஜ ஐயருக்கு பொன்னாடை போற்றி,  நினைவுச் சின்னமும் வழங்கி வைத்தாா்.

இந் நிகழ்வில் செய்திப் பிரிவின் தயாரிப்பாளர்கள் மற்றும்செய்தி ஒலிபரப்பாளர்ளும் கலந்து கொண்டனா்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்