பங்களாதேஷ் மாநாட்டில், இலங்கைக் குழுவுக்கு ஹக்கீம் தலைமை

🕔 January 13, 2016

Hakeem - 098– ஜெம்சாத் இக்பால் –

ங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற புறநலத் தூய்மையாக்கம் தொடர்பான தெற்காசிய மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கை பிரிதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் அதில் முக்கிய உரையொன்றை ஆற்றியதோடு, அமைச்சர் மட்ட கலந்துரையாடலிலும் பங்குபற்றி கருத்துரை வழங்கினார்.

பங்காளதேஷ், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பூட்டான், இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய சார்க் நாடுகளைச் சேர்ந்த 500ற்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்குபற்றிய இந்த மாநாட்டில், அடுத்துவரும் ஆண்டுகளில் சுத்தமான தண்ணீரின் பயன்பாடு, புறத்தூய்மை நடவடிக்கைகளின் இன்றியமையாத தேவை என்பன தொடர்பில் சார்க் நாடுகள் எதிர்நோக்கும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பது பற்றி முக்கியமாக ஆராயப்பட்டது.

பங்காதேஷ் மக்கள் குடியரசு ஜனாதிபதி அப்துல் ஹமீத் இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இம்மாநாடு 2003 ஆம் ஆண்டிலிருந்து சுழற்சி முறையில் தெற்காசிய நாடுகளில் நடைபெற்று வருகின்றது.

இலங்கையிலும் 2011 ஆம் ஆண்டில் இம் மாநாடு நடைபெற்றுள்ளது.

பங்காளதேஷுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துகொண்டு அமைச்சர் ஹக்கீம் நாளை வியாழக்கிழமை நாடு திரும்புகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்