நீதியமைச்சரை விலக்குமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சரத் பொன்சேகா சவால்

🕔 January 13, 2016

Sarath fonseka - 032நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவை அரசாங்கத்திலிருந்து விலக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சவால் விடுத்துள்ளார்.

நாட்டில் நல்லாட்சியைச் தொடர வேண்டுமானால், இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பத்தரமுல்லையிலுள்ள ஜனநாயகக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் இன்று புதக்கிழமை கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.

அவன் கார்ட் நிறுவனமும், மிதக்கும் ஆயுதக் களஞ்சியமும் சட்ட விரோதமானவை என்று நிரூபிக்கப்பட்ட பின்னரும், அவற்றினை பாதுகாப்பதற்கு நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ முயற்சித்து வருவதாகவும் இதன்போது சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.

மேலும், நீதியமைச்சர் தனது பிழையான அறிக்கைகளால் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் பீல்ட் மார்ஷல் இதன்போது கூறினார்.

இதேவேளை, அண்மையில் ஓய்வு பெற்ற சட்டமா அதிபர் கூட, அவன் கார்ட் நிறுவனத்துக்கு எதிராக எதுவித நடவக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும், ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவை கைது செய்வதற்கு சட்டமா அதிபர் உத்தரவினை வழங்கியதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

அவன் கார்ட் நிறுவனத் தலைவருடன் நீதியமைச்சர் தொடர்பு வைத்துள்ளமை குறித்து நாம் ஏற்கனவே அறிவோம் என்றும் சரத் பொன்சேகா இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்