தலைப்புச் செய்திகள்

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால அவகாசம்

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய எதிர்வரும் ஜனவரி 13ஆம் திகதி வரை சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

ராஜாங்க அமைச்சர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று (12) நீதியரசர்களான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கமும் இரண்டு சட்டத்தரணிகளும் அவருக்கு எதிராக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சனத் நிஷாந்த, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் என, அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.