
பாடசாலைகளின் விடுமுறை நாட்களை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் தெலுத்தியுள்ளது.
அடுத்த வருடம் பாடசாலை விடுமுறையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்தில் சராசரியாக பாடசாலைகள் நடத்தப்பட வேண்டிய நாட்கள் 210 என்று இதன்போது அவர் குறிப்பிட்டார்.
இதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்றும், அடுத்த வருடம் டிசம்பர் மாதத்துக்குகுள் அனைத்து தரங்களுக்குமான பாடத்திட்டங்களையும் உள்ளடக்குவதே இலக்காகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



