உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தொகையை அரைவாசியாகக் குறைக்க நடவடிக்கை: ஜனாதிபதி தெரிவிப்பு

🕔 October 9, 2022

ள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவீதத்தினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலுக்கு முன்னர் இதனைச் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, தற்போதுள்ள சுமார் 08 ஆயிரம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் எண்ணிக்கையினை சுமார் 04 ஆயிரமாக குறைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் சபை திட்டத்தை அமுலாக்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், பிரதேச சபைகளில் மொத்த அதிகாரமும் ஒரு நபருக்கு அன்றி, தவிசாளர் சார் குழு ஒன்றுக்கு வழங்கவும், அதற்கான சட்டத்தை திருத்தவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மொத்தம் 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் 8690 உறுப்பினர்கள் உள்ளனர்.

தொடர்பான கட்டுரை: பெண்களுக்கான 25 வீதம்: இலங்கை எட்டியுள்ளதா?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்