துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

🕔 January 10, 2016

Gun shot - 01டவத்தை – கொனஹென பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், நபரொருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

வாகனத்தில் வந்த சிலர், கொனஹென ஸ்ரீவர்தனாராம விகரைக்கு அருகில்  குறித்த இருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியதோடு, துப்பாக்கிச் சூடு நடததியதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர்களை ராகம மருத்துவ மனையில் அனுமதித்த பின்னர், அதில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்