பிஜேபி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, முன்னாள் ஜனாதிபதி கோட்டா சந்திப்பு

🕔 September 29, 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, இந்திய அரசியல்வாதியும் பி.ஜே.பியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள சுவாமி, கோடட்டாவை தனது குழுவினருடன் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதேவேளை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த சுப்ரமணியன் சுவாமி, முன்னாள் பிரதமர் நடத்திய நிகழ்விலும் கலந்து கொண்டார்.

இந்தியாவின் ஆளும் பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுவாமி, ராஜபக்ஷ குடும்பத்தின் நெருங்கிய நண்பராவார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களையும் சுவாமி சந்தித்துள்ளார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில், சுப்ரமணியன் சுவாமி முக்கிய உரையையும் நிகழ்த்தினார்.

Comments