கைதானார் ஹிருணிகா

🕔 January 9, 2016
Hirunika - 0865
நா
டாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிருணிகா கைது செய்யப்பட்டமையை பொலிஸ் ஊடகப் பிரிவும் உறுதி செய்துள்ளது.

தெமட்டகொடை பகுதியில்  ஹிருணிகாவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹவ்லொக் டவுனில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார்.

அதன்போது, அவர் பொலிஸாருடன் செல்வதற்கு தயாராக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட ஹிருணிகா, இன்று பிற்பகல் கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரியவருகிறது.

Comments