
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் புதிதாக 37 ராஜாங்க அமைச்சர்கள் இன்று (08) பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, ராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களுக்குரிய ராஜாங்க அமைச்சு தொடர்பான விபரங்கள் வருமாறு:
ஜகத் புஷ்ப குமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு ராஜாங்க அமைச்சர்
ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி ராஜாங்க அமைச்சர்
லசந்த அழகியவன்ன – போக்குவரத்து ராஜாங்க அமைச்சர்
திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர்
கனக ஹேரத் – தொழில்நுட்ப ராஜாங்க அமைச்சர்
ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர்
ஷெஹான் சேமசிங்க – நிதி ராஜாங்க அமைச்சர்
மொஹா பிரியதர்ஷன் டி சில்வா – விவசாய ராஜாங்க அமைச்சர்
தேனுக விதானகமகே – பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு ராஜாங்க அமைச்சர்
பிரமித்த பண்டார தென்னகோன் – பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்
ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு, இளைஞர் விவகார ராஜாங்க அமைச்சர்
அருந்திக்க பெர்னாண்டோ – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு ராஜாங்க அமைச்சர்
விஜித பேருகொட – பிரிவென கல்வி ராஜாங்க அமைச்சர்
லொஹான் ரத்வத்த – பெருந்தோட்ட ராஜாங்க அமைச்சர்
தாரக பாலசூரிய – வெளிவிவகார ராஜாங்க அமைச்சர்
இந்திக்க அனுருத்த – மின்சக்தி எரிசக்தி ராஜாங்க அமைச்சர்
சனத் நிஷாந்த – நீர்வழங்கல் ராஜாங்க அமைச்சர்
சிறிபால கம்லத் – பெருந்தெருக்கள் ராஜாங்க அமைச்சர்
சாந்த பண்டார – வெகுசன ஊடக ராஜாங்க அமைச்சர்
அனுராத ஜயரத் – நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர்
சதாசிவம் வியாழேந்திரன் – வர்த்தக ராஜாங்க அமைச்சர்
சிசிர ஜயகொடி – சுதேச வைத்திய ராஜாங்க அமைச்சர்
பியல் நிஷாந்த – மீன்பிடி ராஜாங்க அமைச்சர்
பிரசன்ன ரணவீர – சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி ராஜாங்க அமைச்சர்
டி.வி. சானக்க – வனஜீவராசிகள் மற்றும் வனவள ராஜாங்க அமைச்சர்
டி.பி. ஹேரத் – கால்நடை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர்
ஷசீந்திர ராஜபக்ஷ – நீர்ப்பாசன ராஜாங்க அமைச்சர்
சீதா அரம்பேபொல – சுகாதார ராஜாங்க அமைச்சர்
காதர் மஸ்தான் – கிராமிய அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர்
அசோக பிரியந்த – உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர்
அரவிந்த் குமார் – கல்வி ராஜாங்க அமைச்சர்
கீதா குமாரசிங்க – மகளிர் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர்
சிவனேசதுரை சந்திரகாந்தன் – கிராமிய வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர்
கலாநிதி சுரேன் ராகவன் – உயர் கல்வி ராஜாங்க அமைச்சர்
டயனா கமகே – சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர்
சாமர சம்பத் தஸநாயக்க – ஆரம்ப கைத்தொழில் ராஜாங்க அமைச்சர்
அனூப பியும் பெஸ்குவெல் – சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர்



