தாமரைக் கோபுரம் 15ஆம் திகதி திறக்கப்படுகிறது: அனுமதிச் சீட்டுப் பெற்று பொதுமக்களும் பார்வையிடலாம்

🕔 August 31, 2022

தாமரைக் கோபுரம் எதிர்ரும் செப்டம்பர் 15ஆம் திகதி திறக்கப்படும் என, ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

உள்நாட்டவர்கள் 500 ரூபாய்க்கு சாதாரண அனுமதிச் சீட்டை வாங்குவதன் மூலமும், 2000 ஆயிரம் ரூபாவுக்கு வேகமான நுழைவுச் சீட்டை (fast pass) பெற்றுக் கொள்வதன் மூலமும் கோபுரத்துக்குள் நுழைய முடியும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் 20 அமெரிக்க டொலர்கள் நுழைவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

2,000 ரூபாவுக்கு அனுமதிச் சீட்டை வாங்குவோர் வரிசையில் நிற்காமல் கட்டிடத்துக்குள் நுழைந்து, பல தடவை கோபுரத்தின் உச்சியைப் பார்வையிடலாம். 500 ரூபா அனுமதிச் சீட்டை கொள்வனவு செய்வோர் கோபுரத்தின் உச்சியை ஒரு முறை மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

திட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஏழு வருடங்களின் பின்னர், 2019 செப்டெம்பர் 16 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த கோபுரம் திறந்து வைக்கப்பட்டது.

350 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கோபுரம் – தற்போது நாட்டின் மிக உயரமான கட்டடமாகும்.

தாமரைக் கோபுரத்தை அமைப்பதற்கு சீனாவின் எக்ஸிம் வங்கி (EXIM) கடன் வழங்கியிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்