நாடாளுமன்ற உறுப்பினர்களின் எரியுண்ட வீடுகளைத் திருத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தை, மாணவர்களின் மதிய உணவுக்கு ஒதுக்குங்கள்: சஜித்

🕔 August 30, 2022

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீவைத்து நாசமாக்கப்பட்ட வீடுகளை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 40,000 மில்லியன் ரூபாவை 4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கான அவசர போஷாக்கு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (29) உரையாற்றிய அவர்; இலங்கையில் சிறுவர் போசாக்கு குறைபாடு தொடர்பில் யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில்;

“யுனிசெஃப் அறிக்கையின்படி, குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளது.

தற்போது தெற்காசியாவில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சர் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்.

அமைச்சரவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீயினால் சேதமாக்கப்பட்ட வீடுகளைக் கட்டுவதற்கு 40,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இந்த வீடுகளைக் கட்டுவதற்குப் பணத்தை ஒதுக்குவதற்குப் பதிலாக, அந்த நிதியைப் பயன்படுத்தி 4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்க வேண்டும்.

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அத்தகைய முன்மொழிவைச் சேர்த்தால் நாங்கள் எங்கள் ஆதரவை வழங்குவோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்