எல்லை நிர்ணயம் முன்னதாக நிறைவுபெற்றால், ஜுலையில் தேர்தல்; பைசர் முஸ்தபா

🕔 January 8, 2016
Faizer musthafa - 011ல்லை நிர்ணய நடவடிக்கைகள் எதிர்வரும் ஜுலை மாத்திற்கு முன்னர் நிறைவு பெறுமாயின், ஜுலை மாதத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்த முடியும் என்று உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஆறு மாத்திற்குள் எல்லை நிர்ணய செயற்பாடுகளை நிறைவுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி தமக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அதனை சரிவர செய்வதற்கு – தான் முயற்சிப்பதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

இந்த நிலையில், எல்லை நிர்ணயம் தொடர்பான செயற்பாடுகள் நிறைவு பெற்றது, எதிர்வரும் ஜூலை மாதம் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்