ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் வழங்கப்படவுள்ள ‘இடம்’ குறித்து, சஜித் தெரிவிப்பு

🕔 August 27, 2022

முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியிசெயற்குழு உறுப்பினராகவும், அந்தக் கட்சியின் பாராளுமன்ற குழு உறுப்பினராகவும் நியமிக்கப்படவுள்ளார் என, அந்தக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேதமதாஸ தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்க ஊழலுக்கு எதிரான முயற்சியையும் முன்னெடுத்துச் செல்வார் எனவும் சஜித் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் நேற்று சிறையிலிருந்து ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்பட்ட போதிலும், அது முழுமையான பொதுமன்னிப்பாக அமையவில்லை.

எனவே, 07 வருடங்களுக்கு ரஞ்சன் ராமநாயக்க தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்