ரஞ்சனுக்கு தேசியப் பட்டியல்; அவசரப்பட்டு அறிக்கை விட்ட சஜித்: இப்போது வருத்தப்படுகிறார்

🕔 August 27, 2022

– அஹமட் –

னாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்று வெற்றிடமாகும் போது, அதனை வழங்கவுள்ளதாக – நேற்று சஜித் பிரேமதாஸ தெரிவித்தமையானது, ரஞ்சனுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு தொடர்பான முழுமையான தகவலை அறியாத நிலையிலாகும்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ள போதிலும், அது நிபந்தனை அடிப்படையிலான பொதுமன்னிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், ரஞ்சன் ராமநாயக்க 07 வருடங்களுக்கு அரசியல் உரிமையினை இழக்கின்றார்.

எனவே, அவர் தேர்தலில்களில் போட்டியிடவோ, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை குறித்த 07 வருடங்களுக்குள் பெறவோ அருகதையற்றவராகிறார்.

இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள சஜித் பிரேமதாஸ, ‘அரசியலமைப்பின் 34 (1) (d) இன் கீழ் ரஞ்சன் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது ஏமாற்றமளிக்கிறது. மாறாக, அரசியமைப்பின் 34 (2) இன் கீழ் அவரது குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகளுடன் முழு மன்னிப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்பான செய்தி: ரஞ்சன் 07 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது: ரணில் வழங்கிய முழுமையற்ற மன்னிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்