
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் குழுவொன்று, கூட்டுத்தாபன அலுவலகத்தினுள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் இன்று (25) இன்று ஈடுபட்டனர்.
சம்பளப் பிரச்சினையை முன்வைத்து இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிதி நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும், சம்பளம் வழங்குவது மிகவும் நிச்சயமற்றதாக மாறியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வரும் நிலையில், ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
தங்களது சாதாரண சம்பளம் கிடைக்கும் வரை அமைதியான போராட்டத்தை தொடருவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.




