தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது: 05 வருடங்களின் பின்னர் ‘பாய்ந்தது’ சட்டம்

மேர்வின் சில்வா 2017இல் ரூபவாஹினியினுள் நுழைந்தபோது…

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற சம்பவம் சம்பவம் தொடர்பில் நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா 2007 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினுள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது தொழில் அமைச்சராக இருந்த மேர்வின் சில்வா தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் ரூபாவாஹினக் கூட்டுத்தாபனத்தினுள் நுழைந்து செய்திப் பணிப்பாளரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தின் போது, மேர்வின் சில்வா மீது ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியிருந்தனர். அச்சம்பவத்தை ரூபாவாஹினி தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புச் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.