அமைச்சரவையில் மாற்றமில்லை

🕔 January 7, 2016

Government emplem - 098மைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த வருடத்தில், அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

இதேவேளை, புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவிருக்கின்ற கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர், நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் இவ்வருடத்துக்குள் எவ்விதமான மாற்றங்களையும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ஜனவரி மாதம் நடுப்பகுதியளவில் அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்