
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொழும்பில் இன்று (15) ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தற்போது இறுதி கட்ட அரசியல் செயற்பாடுகளில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுமுக உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறிய அவர்; “அவர்கள் உரிய வகையில் நாட்டின் நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” எனவும் தெரிவித்துள்ளார்.



