
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 03ஆவது அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற தேநீர் விருந்துக்கான செலவை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செலுத்தியுள்ளார்.
ஓகஸ்ட் 03ஆம் திகதி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி விருந்தளித்தார்.
இதற்கான செலவு 272,000 ரூபாவை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட பணத்திலிருந்து செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி விக்ரமசிங்கவின் சார்பில் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் செயலாளர் ஆஷு மாரசிங்க இதற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளார்.




