மியன்மாரில் ஜனநாயக செயற்பாட்டாளர்களுக்கு தூக்கு தண்டனை

🕔 July 25, 2022
பியா செயா தாவ் (தூக்கிலிடப்பட்டவர்களில் ஒருவர்)

மியன்மார் ஜனநாயக ஆர்வலர்கள் நான்கு பேர் ராணுவத்தால் தூக்கிலிடப்பட்டனர்.

மியன்மாரில் கடந்த 50 வருடங்களில் துாக்கு தண்டனை வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக செயற்பாட்டாளர் கோ ஜிம்மி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பியா செயா தாவ் உட்பட நால்வர் மீது ‘பயங்கரவாத செயல்கள்’ மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மூடிய நிலையில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில், மியான்மரின் அரசு செய்தி நிறுவனமான குளோபல் நியூஸ் லைட்; நான்கு பேரும் “கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற பயங்கரவாத செயல்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியதால், துாக்கிலிடப்பட்டனர்” என தெரிவித்துள்ளது.

எனினும் அவர்கள் எப்போது அல்லது எப்படி தூக்கிலிடப்பட்டனர் என்று அந்த ஊடகம் தெரிவிக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில், நாட்டின் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதை அடுத்து, மியன்மாரில் எதிர்பாளர்கள் மீது ராணுவ அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்