தலைப்புச் செய்திகள்

இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாக திரெளபதி முர்மூ பதவியேற்பு

இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மூ (64 வயது) இன்று பதவியேற்றார்.

பதவியேற்பு விழா இன்று காலை நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்றது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நாட்டின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை திரெளபதி முர்மூ பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் இந்தியாவின் நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவராவார்.

இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக திரெளபதி முர்மூ களமிறக்கப்பட்டார்.