அணுகுண்டை விடவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடி குண்டை, வட கொரியா பரிசோதித்ததாக அறிவிப்பு

🕔 January 6, 2016

North korea - 976ணுகுண்டைவிட மிகவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளது.

கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், வட கொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதித்துள்ளது.

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், தங்கள் நாடு ஹைட்ரஜன் வெடிகுண்டை தயாரித்துள்ளதாக கடந்த டிசம்பர் மாதமே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று புதன்கிழமை ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளது.

இந்தச் சோதனையால், வட கொரிய அணு ஆயுத சோதனைக் கூடம் அமைந்துள்ள பகுதியில் செயற்கையாக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும், 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த 2006, 2009, 2013 ஆகிய ஆண்டுகளில் வட கொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்