பாகிஸ்தான் பிரதமருடன் அமைச்சர் ஹக்கீம், கண்டியில் கலந்துரையாடல்
🕔 January 6, 2016
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை அமைச்சர் ஹக்கீம் – கண்டி மஹவலி ரீச் ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினார்.
முன்னதாக, இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் – இன்று புதன்கிழமை கண்டிக்கு விஜயம் மேற்கொண்டபோது, அவரை – அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் வரவேற்றார்.
ஹெலிகொப்டரில் கண்டி அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தினை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமரை, அமைச்சர் ஹக்கீம் வரவேற்று அழைத்துச் சென்றார்.
இதன்போது, முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவும் உடனிருந்தார்.