
லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 50 ரூபாவினல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அதன் புதிய விலை 4910 ரூபாவாகும்.
லிட்ரோ எரிவாயு இன்று தொடக்கம் எரிவாயு விநியோக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று தொடக்கமும், மற்றைய பகுதிகளுக்கு ஜூலை 13ம் திகதியிலிருந்தும் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படும்.
எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, கொள்வனவின் போது வாடிக்கையாளர்கள் தமது மே மாத மின் கட்டணத்தைச் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.



