
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக, தான் பிபிசிக்கு தவறுதலாகத் தெரிவித்து விட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்திய செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிபிசியிடம் நேற்று பேசிய சபாநாயகர்; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர் அருகிலுள்ள நாடொன்றில் இருப்பதாகவும், புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் என்றும் பிபிசியிடம் கூறியிருந்தார்.
நேற்று முன்தினம் (09) கொழும்பு போராட்ட களத்தில் இருந்த மக்கள் – ஜனாதிபதி மாளிகையையும் ஜனாதிபதி செயலகத்தையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இதற்கு முன்னதாக கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறிய – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பசில் ராஜபக்ஷவும் திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.



