
முன்னதாக அறிவித்தபடி தாம் குறித்த நாளில் – தான் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார பூர்வமாக அறிவித்துள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பதவியில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 13ஆம் திகதி (நாளை மறுதினம்) விலகுவதாக சபாநாயகருக்கு முன்னதாக அறியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் கொழும்புவில் மேற்கொள்ளப்பட்ட பாரிய பொதுமக்கள் போராட்டத்தை அடுத்து, இந்த முடிவை ஜனாதிபதி அறிவவித்தார்.
இதேவேளை பிரதமரும் பதவி விலக வேண்டுமென போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து உறுதியான முடிவுகள் எவையும் அறிவிக்கப்படவில்லை.



