
கொழும்புவில் ஜனாதிபதி மாளிகையை அண்மித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டு பிரயோகம் நடத்தியுள்ளனர்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தின் மீதே இவ்வாறு கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
களனி பல்கலைக்கழத்துக்கு அருகிலிருந்து நேற்று மதியம் பேரணியை ஆரம்பித்த அவர்கள், நேற்று மாலை கொழும்பு – கோட்டையை வந்தடைந்து இரவு முழுவதும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி இன்று (09) கொழும்புவில் பல்வேறு தரப்பினரும் இணைந்து போராட்டங்களை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.



