தலைப்புச் செய்திகள்

குழந்தையுடன் மனைவி பிரான்ஸ் பறந்தமைக்கான காரணத்தை, ட்விட்டரில் வெளியிட்டார் நாமல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ அவரின் குழந்தையுடன் இன்று அதிகாலை சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளார்.

லிமினியும் அவரது குழந்தையும் நள்ளிரவு 12.05 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-469 இல் சிங்கப்பூர் ஊடாக பின்னர் பிரான்ஸ புறப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது குடும்பத்தினரை வழியனுப்புவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்திருந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெய்லி மிரர் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ; ‘எனது மனைவியின் பணி எப்போதும் பயணம் மற்றும் சுற்றுலா தொடர்பானது. இதற்கும் எனது அரசியல் வாழ்க்கைக்கும் தொடர்புகளில்லை. அவர் ஒரு தொழிலில் ஈடுபட்டு ஒரு பெண். அவர் அப்படித்தான் தொடர்ந்தும் இருப்பார். அவருடைய பயணம் – அவரின் பணி சார்ந்தது’ என குறிப்பிட்டுள்ளார்.