
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மஹரகம பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு சென்று கொண்டிருந்த போது, பொலிஸ் மோட்டார் பைக்கில் – ஆர்ப்பாட்டத்தை ஊடறுத்து நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது மோட்டார் பைக்கை நிறுத்தி விட்டு, “போராட்டம வெல்க… போராட்டம் வெல்க” என கோஷமெழுப்பினார்.
இதனையடுத்து, அவரை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள் தமது மகிழ்சியை வெளிப்படுத்தும் வகையில், அவருடன் இணைந்து கோஷமெழுப்பினர்.
முன்னரும் அரசாங்கத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் இணைந்து தமது ஆதரவைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



