மதுப் பாவனை நாட்டில் 30 வீதத்தினால் வீழ்ச்சி

🕔 June 23, 2022

நாட்டில் மதுபானங்களின் பாவனை 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கோப் (COPF) எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முன்னிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மதுவரித் திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை எட்டுவதற்கு பல தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மதுபானத்தை உற்பத்தி செய்வதற்கான எதனோலின் அளவை வரையறுத்துள்ளமை, டீசல் மற்றும் உலை எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளே இதற்கான காரணங்களாகும் என அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அத்துடன், மதுபானங்களின் விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார இன்னல்களும் மதுபான பாவனை குறைந்துள்ளமைக்கான பிரதான காரணமாகும் என கோப் குழுவில் தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக சட்டவிரோத மதுபான தயாரிப்புக்களுக்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாகவும் அந்த குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்