இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க, உலக வங்கி இணக்கம்

🕔 April 26, 2022

லங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்க உலக வங்கி ஒப்புக் கொண்டுள்ளது என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிரந்தர பிரதிநிதி சியோ காந்தா (Chiyo Kanda ) இன்று (26) ஜனாதிபதியுடனான ஒரு சந்திப்பின் போது, தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க உலக வங்கி ஒப்புக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதில் முதலாவது கட்டமாக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உடனடியாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்