கடற்கரைப் பூங்கா: சாய்ந்தமருது

🕔 December 27, 2015

Beach park - 012
– ஜௌஸி அப்துல் ஜப்பார் –

(சட்டென மனசில் பட்டவை) 

க்கள் பாவனைக்காக மூடிவைக்கப்பட்டு
மாடுகள் பாவிக்க திறக்கப்பட்டுள்ளது??

பாழ்வளவைக் கட்டவா பம்மாத்து அத்தனை.

அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா. “சிறப்பா ஞாபகப்படுத்திட்டிங்க”.
திறந்தீங்க பிறகு திரும்பியும் பார்க்கவில்லை.

கட்டக்கட்ட ஏன் உடைக்கிறார்கள்?
மின்விளக்குகள் யாருக்குத் தொல்லை?

கழிவறை மூடியிருக்கிறது “திறந்த” நாளிலிருந்து.
கட்டியம்கூறுவது “இத்தால் அறிந்துகொள்க:
“பெயரெடுக்க கட்டப்பட்டுள்ளது பாவனைக்காக அல்ல”

இத்தனை கோடியில் கட்டிவிட்டு
முன்மூலையில் தகடு கொண்டு அடைத்திருக்கின்றீர்கள்.
‘தகடு’ குறியீடா??

குப்பைகள்.
ஒரு நகர பரப்புக்கு ஒரு ‘பார்க்’ பதம்.

பராமரிப்புக்காய் ஏதும் சமூக
அமைப்பிடம் ஒப்படைப்பீர்களா??
அல்லது பராமுகமாய் இதைவைத்தே அரசியல் செய்வீர்களா??

பாவம் மேயர் அங்கிள்.
பாரதூரம் தெரியாமல் பாரமெடுத்த நாளிலிருந்து திண்டாடும் சிங்கில்.

இன்னும் நீடிப்பாம்.
ஆறுமாதங்களில் அதிசயங்களும் நடக்கலாம்!!Beach park - 014Beach park - 015Beach park - 016Beach park - 017Beach park - 013

Comments