அல்லாமா இக்பால் புலமைப் பரிசில்: பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் கற்க 1000 இலங்கை மாணவர்களுக்கு சர்ந்தர்ப்பம்

🕔 March 25, 2022

– அஷ்ரப்  ஏ சமத் –

பாக்கிஸ்தானில் உயர்கல்வி பயிலுவதற்காக  இலங்கை மாணவர்கள் 1000 பேருக்கு ‘அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்’ திட்டமொன்றை வழங்க உள்ளது. எதிா்வரும் ஏப்பல் 30ஆம் திகதிக்கு முன்னர் இணையம் ஊடாக இலங்கை மாணவா்கள் இதற்கு விண்னப்பிக்கலாம்.

இதனை பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆலயத்தில் இன்று 25ஆம் திகதி நடைபெற்ற ஊடக மாநாட்டில் பாக்கிஸ்தான்  பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள்  தெரிவித்தனர்.

பாக்கிஸ்தான் நாட்டில் இருந்து 11 பல்கலைகழகங்களின் உபவேந்தர்கள், பேராசிரியா்கள் மற்றும் பணிப்பாளா்கள் இலங்கை வந்துள்ளனர்.

இவா்கள் இணைந்து இன்று (25) கொழும்பு 07இல் உள்ள  பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயங்களைக் கூறினர்.

இந்த ஊடக சந்திப்பு பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடகச் செயலாளர் கலசும் கைசர் ஜீலனி தலைமையில் நடைபெற்றது.

இதில் பாக்கிஸ்தான் நாட்டின் உயர்கல்வி அமைச்சின் ஆணைக்குழுவின் ஆலோசகர் உவைஸ் அஹமட் உட்பட பல்கலைக்கழகங்ககளின் உபவேந்தர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

இங்கு பாக்கிஸ்தான் உயா்கல்வி அமைச்சின் ஆலோசகா் உவைஸ் அஹமட் தெரிவிக்கையில்;

“அல்லாமா இக்பால் புலமை புலமைப் பரிசில்  திட்டத்தின் கீழ், பாக்கிஸ்தானிலிருந்து 11 பல்கலைக்கழககங்களது உவவேந்தா்கள், பணிப்பாளர்கள், பேராசிரியா்கள் மற்றும் பதிவாளா்கள் இலங்கை வந்துள்ளோம். கொழும்பில் ‘எக்ஸ்போ’ கண்காட்சியிலும், மார்ச் 28ஆம் திகதி கண்டியில் உள்ள பாக்கிஸ்தான் அலுவலகத்திலும் எங்களது கண்காட்சிகள் மாணவா்களுக்கான விண்ணப்பம்  பயிற்சிநெறிகள் பற்றிய விளக்கங்கள் அளிக்கப்படும். 

அண்மையில் இலங்கை வந்திருந்த பாக்கிஸ்தான் பிரதமா் இம்ரான்கான், இலங்கை ஜனாதிபதி மற்றும்  உயர் கல்வியமைச்சர் ஆகியோருக்கிடையே கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின்படி, இலங்கை மாணவர்களுக்கு இன, மத, நிற, மொழி வேறுபாடுகளின்றி இந்த இலவச பட்டக் கல்வியை வழங்குகின்றோம்.

நுாற்றாண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த லாஹூர் பல்கலைக்கழகம், பெண்கள் பல்கலைக்கழகம்,  அரச லாஹூர் கல்விக் கலாசாலை உள்ளிட்ட மேலும் சில பல்கலைக் கழகங்களிலும் மாணவா்கள் தெரிவு செய்யும் பயிற்சிநெறிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

குறிப்பாக மருத்துவம், பொறியியல்,  இளங்கலை பட்டப்படிப்பு துறைகளுக்கு க.பொ.த உயா்தரம் 65 வீத மதிப்பெண்களுடன் சித்தியடைந்திருத்தல் வேண்டும். வயது எல்லை 23 ஆகும். முதுமாணி 35 –  40 வயதுக்கும் மேற்படாமல் இருத்தல் வேண்டும். 

இதனை விட தங்குமிட வசதிகள், ஒருவழி பிரயாணச் சீட்டு, கற்கை நெறிகளுக்கான செலவுகள் போன்றவை புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

இலங்கையில் பிராந்தியங்களுக்கு நேரடியாகச் சென்று, விண்ணப்பித்த மாணவா்களுக்கிடையே பரீட்சை ஒன்று நடத்தப்பட்டு, மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்படுவர்.

இறுதியாக விண்ணப்பங்கள் இலங்கை உயர் கல்வியமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயங்கள் ஊடாக தெரிபு செய்யப்பட்டு  அனுமதிகள் வழங்கப்படும்.

பாக்கிஸ்தானில் பங்களாதேஸ், ஆப்கனிஸ்தான், இலங்கை மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் என, 35 நாடுகளுக்கு மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள், எமது பல்கலைக்கழகங்களில் பயின்று வெளியேறுகின்றனர்.

இலங்கை மாணவா்கள் கூடுதலாக மருத்துவத் துறையில் நுாற்றுக்கணக்கானோர் கற்று வெளியேறி, இலங்கையின் பல பாகங்களிலும் மருத்துவ தொழிலைச் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

மாணவர்கள் விண்ணப்பங்களை  ஒன்லைன் ஊடாக htt://hec.gov.pk/site/pksl எனும் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்