ஹாபிஸ் நசீருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர்

🕔 March 24, 2022

ட்சியின் தீர்மானத்துக்கு விரோதமாக, சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட தமது நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமதுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மு.காங்கிரஸ் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமிடம் பேசி, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சர்வ கட்சி மாநாட்டில் தமது கட்சி கலந்து கொள்வதில்லை என, மு.காங்கிரஸ் தீர்மானித்திருந்தது.

இ்ந்த நிலையில், ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டில் மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் மட்டும், அந்தக் கட்சி சார்பில் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். முஷாரப் மற்றும் அலிசப்ரி றஹீம் ஆகியோர் சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட நிலையில், கட்சியை விட்டும் இடைநிறுத்தப்பட்டவர்களின் செயற்பாடுகளுக்கு கட்சி பொறுப்பேற்காது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Comments