பாலமுனையில் நூல் வெளியீடு; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி

🕔 December 25, 2015

Book - 098– றியாஸ் ஆதம் –

பாலமுனையைச் சேர்ந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் கவிஞர் பஸ்மில் ஏ. கபூர் எழுதிய ‘இரண்டாம் உயிர்’ கவிதை நூல் வெளியீடும், கவிஞர் கௌரவிப்பு விழாவும் நாளை சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

டொக்டர் எஸ்.எம். றிபாஸ்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை ஆகியோர் கௌரவ அதிதிகளாக இந் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்