வானிலை அறிவிப்பாளராக கலக்கும் ரோபோ

🕔 December 25, 2015

Robot - 098

சீனாவிலுள்ள ‘ஷாங்காய் ட்ராகன் டிவி’ எனும் தொலைக்காட்சி செய்திச் சேவையொன்று, தன்னுடைய வானிலை அறிவிப்பாளராக, செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவொன்றினை நியமித்துள்ளது.

காலை நேர செய்தியின் போது, திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றிய குறித்த ரோபோ, “குளிர்கால பருவத்தில் என் புதிய வேலை தொடங்குவதில் நாம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று கூறியது.

மேற்படி செய்திச் சேவையின் ரோபோவுக்கு ‘ஜியோஐஎஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ரோபோவை தயாரித்துள்ளது.

இந்த ரோபோவின் குரல் அனைவரையும் கவர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அதன் வார்த்தை உச்சரிப்பு மற்றும் செய்தியை வெளியிடும் விதம் பார்ப்பவரை கவரும் விதமாக உள்ளதாகவும் கூறிப்படுகிறது.

ரோபோவை பணியில் அமர்த்தியிருக்கும் ‘ஷாங்காய் ட்ராகன் டிவி’ நிறுவனம் தெரிவிக்கையில்; “செய்தியாளர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்து விட்டு, ரோபோக்களை வேலையில் அமர்த்தும் எண்ணம் இல்லை” என்று தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்