தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருகிறார்: பரவும் செய்திகளுக்கு பதில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் குறித்து ஆலோசித்து வருவதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், அவை அடிப்படை ஆதாரமற்றவை எனவும் ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

“ஜனாதிபதி இந்த வகையான நெருக்கடிகளின் போது தப்பிச் செல்லும் மனிதரல்லர். அவர் உறுதியும் தொலைநோக்கு பார்வையும் கொண்டவர்” என்றும் ரத்நாயக்க கூறியுள்ளார்.

பொது மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, ஜனாதிபதி தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதியின் திட்டங்களை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பல்வேறு குழுக்களால் இந்தச் செய்திகள் பரப்பப்படுவதாகவும் கிங்ஸ்லி ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.