பொம்மை, பொம்மலாட்டக்காரன், புடலங்காய்: ஆட்சியாளர்கள் குறித்து விஜேதாச ராஜபக்ஷ சொன்ன உதாரணங்கள்

🕔 March 13, 2022

சில் ராஜபக்ஷவுக்கோ அரசாங்கத்திற்கோ தொடர்ந்தும் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனவே மக்கள் புதிய சக்தியை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

“வாக்களித்த 69 லட்சம் ம்ககளுக்கு மாத்திரமல்ல, சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் அரசாங்கம் மீறியுள்ளது.

அரசாங்கம் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றி இருந்தால் அதனை வெளியிட முடியும். ஜனாதிபதி தற்போது பொம்மை, அதனை ஆட்டுவிக்கும் பொம்மலாட்டகாரன் பசில் ராஜபக்ஷ.

மகிந்த ராஜபக்ஷ தற்போது புடலங்காய் நிலைமைக்கு சென்றுள்ளார்.

20வது திருத்தச் சட்டத்தை ஆதரித்தமை குறித்து கவலையில் இருக்கின்றேன். ஜனாதிபதி மீது வைத்த நம்பிக்கையின் பாவத்தை தற்போது அனுபவித்து வருகின்றோம்” எனவும் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்