கோதுமை மா விலை அதிகரிக்கிறது

🕔 March 11, 2022

கோதுமை மாவின் விலையை பிறீமா நிறுவனமும் அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக பிறீமா நிறுவனம் அறிவித்துள்ளதென விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கோதுமை மா விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று  (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்