சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வும்; பாடசாலைகளில் கற்பிப்பதற்கான யோசனை முன்வைப்பு

🕔 December 17, 2015

Chandrika - 0987மாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்கிற பாடத் திட்டமொன்றினை, பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இயங்கும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அலுவலகம் இந்த யோசனையினை முன்வைத்துள்ளது.

பல இனத்தவர்களும், சமயங்களைப் பின்பற்றுவோரும் வாழுகின்ற இலங்கையில், இவ்வாறானதொரு பாடத்திட்டத்தினை அறிமுகம் செய்யும்போது, அவர்களிடத்தில் பாரியதொரு புரிந்துணர்வு ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

இது தொடர்பான ஆரம்ப பேச்சுவார்த்தைகளை கல்வியமைச்சுடன் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அலுவலகம் மேற்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தப் பாடத்திட்டத்தை பாடசாலைகளில் அறிமுகம் செய்வதற்கு, கல்வியமைச்சு இதுவரை சாதகமான பதிலினை வெளிப்படுத்தவில்லை என அறிய முடிகிறது.

சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்கிற பாடத் திட்டமானது, தற்போது பட்டப்படிப்பு மற்றும் பட்டப் பின்படிப்புகளுக்காக, சில பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்