ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நாமல் ராஜபக்ஷவின் அப்பனின் கட்சியல்ல; அமைச்சர் டிலான் காட்டம்

🕔 December 17, 2015

Dilan - 098ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியல்ல என்பதை, அவரின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

எனவே நாமல் ராஜபக்ஷ, அவரின் விருப்பத்துக்கு அறிக்கைகளை வெளியிட முடியாது என்றும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

தான், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நேசிப்பவன் என்றும் மற்றவர்கள் எல்லோரும் கூட்டாட்சியில் இணைந்து விட்டதாகவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளமை தொடர்பிலேயே ராஜாங்க அமைச்சர் டிலான் நேற்று புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து வெளியிடும்போது கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அவரின்  தந்தையாரின் கட்சியல்ல என்பதை, நாமல் ராஜபக்ஷ தெரிந்துக்கொள்ள வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவின் தீர்மானப்படியே அந்தக்கட்சி அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டது.

இந்தநிலையில், சிறிய வயது என்றப்படியால் நாமல் ராஜபக்ஷ இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக குறிப்பிட்ட டிலான், சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு எதிராக செயற்பட்டால் அவருக்கு எதிர்கால அரசியல் இல்லாமல் போகும் என்றும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்