மின் துண்டிப்பு: பொதுமக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உத்தரவாதம்

🕔 March 2, 2022

நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (02) தெரிவித்துள்ளது.

மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு திறைசேரியும் இலங்கை மத்திய வங்கியும் உறுதியளிக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

நாட்டின் மின்சார உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, தற்போது கடுமையான மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே பல எரிபொருள் தாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், டொல நெருக்கடியின் விளைவாக எரிபொருளை கொள்வனவு செய்ய முடியவில்லை.

இதனால், இலங்கை மின்சார சபை நீண்ட காலமாக மின்துண்டிப்பினை மேற்கொண்டு வருகிறது. இன்று 07 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்சாரம் தடைப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்