ஜனாதிபதி மைத்திரி, பாப்பரசரின் அழைப்பையேற்று இத்தாலி விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலி பயணமானார்.
பரிசுத்த பாப்பரசரின் அழைப்பின் பேரிலே ஜனாதிபதி இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க மற்றம் அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட மேலும் சிலர் ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ளனர்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ்ஸை ஜனாதிபதி நாளை சந்திக்கவுள்ளதாகவும், நாளை மறுதினம் வத்திக்காணி்ல் உள்ள விசேட இடங்களுக்கு செல்லவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பரிசுத்த பாப்பரசரை சந்திக்கின்ற இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.