‘பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக, இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்’: நிந்தவூரில் பயிற்சிப் பட்டறை

🕔 January 12, 2022

– நூருல் ஹூதா உமர், ஐ.எல்.எம் நாஸிம் –

‘பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக, இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்’ எனும் தலைப்பில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மூவின இளைஞர் யுவதிகளுக்கான 02 நாள் விஷேட பயிற்சி நெறி, நிந்தவூர் தோம்புக்கண்டம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கப்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டின் நேற்று முன்தினமும் (10), நேற்றும் (11) நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்டாட் தலைமை தாங்கினார்.

‘பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்’ என்னும் மகுடத்தின் கீழ் நடைபெற்ற இப் பயிற்சி நெறியின் போது, இன நல்லுறவு தொடர்பான பல்வேறு குழு நிகழ்வுகள், கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

பயிற்சி நெறியின் இவளவாளர்களாக சிரேஷ்ட உள வளத்துணை ஆலோசகர்களான எஸ். ஸ்ரீதரன் மற்றும் கே. புவனேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயிற்சி நெறியில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்