கடனை வாங்கி வெறுமனே உண்டு செலவழித்து வருகிறோம்: அரசாங்கம் மீது, ஆளுந்தரப்பு எம்.பி அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றச்சாட்டு

🕔 December 23, 2021

நாடு பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளுப்படுவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவையும், நிதி அமைச்சும் அதேபோல் அரச அதிகாரிகளுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஆளுங்கட்சி சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை இருந்த போதிலும் இன்றுள்ள நிலைமைகளை அவதானிக்கும் போது அவ்வாறான மறுசீரமைப்பு வேலைத்திட்டமொன்று காணப்படவில்லை.

நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடி நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இவற்றை கூறினார்.

இலங்கைக்கு என்ற ஒரு பொருளாதார கொள்கையை உருவாக்கிக்கொள்ள தவறியுள்ளமையே நாடு உற்பத்தித்துறையில் வீழ்ச்சியடைய பிரதான காரணமாகும். சர்வதேச கடன்களை பெற்றுக்கொண்டு வெறுமனே உண்டு செலவழித்து வருகின்றோமே தவிர அவசியமான எந்தவித வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.

நாட்டில் ஊழலும், அரச மோசடிகளும் அதிகரித்துவிட்டன. இவ்வாறான நிலையில் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது.

நாட்டின் அரசியல் கொள்கை எதுவாக இருந்தாலும் பொதுவான பொருளாதார கொள்கை ஒன்றையே  கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்