அமைச்சர் யாப்பா மக்களை திசை திருப்புகிறார்; ‘கபே’ நிறைவேற்றுப் பணிப்பாளர்

🕔 December 10, 2015

Keerthi Thennakoon - 098ள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ள கருத்து, மக்களை திசைதிருப்பும் நோக்கம் கொண்டதென ‘கபே’ எனப்படும் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன்  தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய நடவடிக்கைகள் இன்னும் பூர்த்தியடையாத காரணத்தால், உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று புதன்கிழமை தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே, ‘கபே’யின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் மேற்கண்டவாறு கூறினார்.

தமக்குக் கிடைத்த தகவல்களின் பிரகாரம், எல்லை நிர்ணயம் குறித்த இறுதி அறிக்கை எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரியில் கையளிக்கப்படுமெனவும், அதன் பின்னர் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் கீர்த்தி தென்னக்கோன் சுட்டிக்காட்டினார்.

எனினும் சில அரசியல் காரணங்களுக்காக, தேர்தலை ஒத்திவைக்கப் போவதாக சில தரப்பினர் கூறி மக்களை பிழையாக வழி நடத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல், மேலும் தள்ளிப்போகலாம்; அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்