தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை செயலிழக்கச் செய்ய அரசாங்கம் முயற்சி

🕔 December 12, 2021

கவல் அறியும் சட்டத்தை செயலிழக்கச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

கேகாலையில் இன்று (12) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் கூறினார்.

“தகவல் அறியும் சட்டத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்துவது கவலையளிக்கின்றது.

கூட்டணியொன்றை முன்னெடுத்து செல்லும் பொறுப்பு அதனை ஏற்படுத்தியவர்களிடமே உள்ளது.

அதனை சரிவர நிறைவேற்றாத பட்சத்தில், கூட்டணி பிளவுப்படுவதற்கான வாய்ப்புள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments