உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல், மேலும் தள்ளிப்போகலாம்; அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவிப்பு

🕔 December 9, 2015
Laxman yapa abewardana - 098ள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பிற்போடப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகாத காரணத்தினால் இவ்வாறு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படலாம் எனஅவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தப்படும் என்று ஏற்கனவே அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகும் வரையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்